தேவாலய கதவை உடைத்த குட்டி யானையால் பரபரப்பு

வால்பாறை, அக்.28: வால்பாறை உருளிக்கல் எஸ்டேட் வனப்பகுதியில் நேற்று அதிகாலை உணவு தேடி வெளியேறிய 8 யானைகள், வீடுகளுக்கு முன் இருந்து தோட்டங்களை சேதப்படுத்தியது. மேலும் 2 தொழிலாளர்களின் வீடுகளில் இருந்த ஜன்னல்களை உடைத்து உணவு தேடியதில் பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் தேவாலய கதவை உடைத்த குட்டி யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பழையகாடு பகுதியில் கடந்த 1 மாதமாக உள்ள ஒற்றை யானை, அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் கூறுகையில், ‘‘யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் வடிகால் மற்றும் செப்டிக் டேங் உடைந்து சேதப்படுத்துகிறது. எனவே யானையை பிடித்து மாற்று பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>