×

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் தோட்டக்கலை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

திருவள்ளூர், அக்.23: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கீரை, கொத்தமல்லி பயிருக்கு  ஹெக்டேருக்கு ₹2500,  மற்றும் தக்காளி, கத்திரி, வெண்டை, அவரை, கொடிவகை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ₹3750 வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு விவசாயி 2 ஹெக்டேர் வரை ஊக்கத் தொகை பெறலாம். தனி விவசாயியாக இருப்பினும், குழு உறுப்பினராக இருப்பினும், அங்கக சான்று பெற ₹500 வழங்கப்படும். இதற்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...