×

ஸ்பைரோ பிரைம் கல்வி நிறுவன மாணவன் நீட் தேர்வில் சாதனை

சென்னை: ஸ்பைரோ பிரைம் எஜூகேஷனல் இன்ஸ்டிடியூட்ஸ் என்ற கல்வி நிறுவனம், நாமக்கல் மற்றும் சென்னையில் செயல்படுகிறது. இங்கு நீட்  தேர்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சிகள் சிறப்பாக வழங்கப்படுகின்றன. இங்கு படித்த மாணவ, மாணவிகளில் 2 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் 675  மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுத்துள்ளனர். இதேபோல் 650க்கு  மேல் 4 பேர், 600க்கு மேல் 45 பேர், 550க்கு மேல் 94 பேர், 500க்கு மேல் 157 பேர்  மதிப்பெண் பெற்றுள்ளனர்.  இதில், கடந்த 2019ம் ஆண்டு முதல் படித்து வந்த கொளஞ்சியப்பன் என்ற மாணவன், நீட் தேர்வில் 720க்கு 680  மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு ஸ்பைரோ பிரைம் எஜூகேஷனல்  இன்ஸ்டிடியூட்ஸ் நிறுவனம் சார்பில் ₹1 லட்சம் நிதி  உதவி  வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையங்களில் அதிக தேர்ச்சி உள்ள ஒரே மையம் ஸ்பைரோ மையம்தான். இங்கு படித்த 509 மாணவர்களில்,  285க்கும் மேற்பட்டோர் 2020ம் ஆண்டு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்றுள்ளனர். அடுத்த பயிற்சி வகுப்புகள் 19ம் தேதி துவங்குகிறது, என  அதன் இயக்குனர் உதயகுமார் தெரிவித்தார்.
  இதுகுறித்து மாணவன் கொளஞ்சியப்பன் கூறுகையில், ‘‘இயக்குநரின் உத்தேக பயிற்சியால்தான் அதிக மதிப்பெண் பெற்றேன். டாக்டராகும் கனவை  இந்த நிறுவனம் நிறைவேற்றியுள்ளது’’ என்றார்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...