பிரிட்ஜ், ஏசி பழுது பார்க்க இலவச பயிற்சி

சேலம், அக்.22:  சேலம் அரசு மகளிர் ஐடிஐ முதல்வர் லீமாரோஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக பிரிட்ஜ் மற்றும் ஏர்கண்டிஷன் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் வகையில், பெண்களுக்கென்றே, சேலம் அரசு மகளிர் ஐடிஐயில் 2 வருட இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எல்லா வயது பெண்களும், மாதம்தோறும் ₹500 உதவித்தொகையுடன் இப்பயிற்சியை பெறலாம். பயிற்சியை முடிக்கும் அனைவருக்கும், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் உடனடி வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு மாவட்ட தொழில்மையம் மூலம் சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். விருப்பமுள்ளவர்கள் சேலம் கோரிமேடு அய்யந்திருமாளிகை ரோட்டில் உள்ள அரசு மகளிர் ஐடிஐயை நேரிலோ அல்லது 99409-66090 மற்றும் 96551-47502 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

Related Stories:

>