×

கொரோனா நோயாளிகளுக்காக 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர்

நாமக்கல், அக்.23: நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, புதியதாக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட உள்ளது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளகொரோனா வார்டில், 91பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 48 பேருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு ஈரோட்டில் இருந்து திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர் பெற்று வரும் நிலையில், தற்போது புதியதாக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர் அரசு மருத்துமவனையில் பொருத்தப்பட உள்ளது. இதனால், அதிக நோயாளிகள் பயன் பெறுவார்கள்.

தற்போது திரவ ஆக்ஸிஜன் கொரோனா வார்டு, பச்சிளங்குழந்தை வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஆபரேஷன் போன்ற பிரிவுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியமாக கொரோனா வார்டுக்கு அதிகளவு தேவைப்படுகிறது. நோயாளிகள் எண்ணிக்கையை அதிகரித்த நிலையில், இந்த புதிய திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட உள்ளது. இதனால் தடையில்லாமல் அனைத்து நோயாளிகளுக்கும், ஆக்ஸிஜன் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : corona patients ,
× RELATED ஆந்திர மாநிலம் அனந்தப்பூர்...