×

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஒசூர், அக்.23:  கர்நாடகா மாநிலத்தில் தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகா மற்றும் தென்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்து, ஓசூர் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கெலவரப்பள்ளி அணைக்கு 550 கனஅடியாக இருந்த  நீர்வரத்து, நேற்று காலை 853 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 38.70 அடியாக உள்ளது. பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 648 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Tags : Kelavarapalli Dam ,
× RELATED கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும்...