×

நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, அக்.23: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகே நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு  ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் தங்கராஜ், மண்டல செயலாளர் முனிராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுக்காமல், அரசே ஏற்று நடத்த வேண்டும். இளநிலை உதவியாளர், உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர் முதுநிலை பட்டியலை உடனே வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க மாவட்ட பொருளாளர் சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Highway workers ,
× RELATED இந்தியாவின் எல்லை பகுதிகளில்...