எட்டயபுரத்தில் காங். உறுப்பினர் சேர்க்கை

எட்டயபுரம், அக். 23: எட்டயபுரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பிறந்த நாள் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தலைமை வகித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், நகரத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கை படிவம் மற்றும் உறுப்பினர் அட்டைகள் வழங்கினார். இதில் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன், எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் குமார் பாண்டி, பொருளாளர் உமர் ஆப்தின், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாகிர்

உசேன், சிவா, மகளிர் அணி லதா பத்மா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: