×

தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கில் தொடர்பு சாத்தான்குளம் கோர்ட்டில் வாலிபர் சரண்

தூத்துக்குடி, அக். 23:  தூத்துக்குடி மீளவிட்டான் காட்டுப்பகுதியில் கிரிக்கெட் மைதானம் அருகே தூத்துக்குடி கணேஷ் நகரை சேர்ந்த ரவுடி கதிரேசன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர் மீது, தூத்துக்குடி தென்பாகம், திசையன்விளை காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு தென்பாகம் போலீசில் ரவுடிகள் பட்டியலிலும் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. பிரபல ரவுடியான இவரை முன்விரோதம் காரணமாக நண்பர் பவித்ரன் உதவியுடன்  சிலர் அழைத்துச்சென்று மது விருந்து கொடுத்து கொலை செய்தது சிப்காட் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (28), தாமோதரன் நகர் நவீன் (20), முத்தையாபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (19), தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கிய செல்வ சதீஷ் (22) ஆகிய 4 பேரை கைதுசெய்த போலீசார், இவர்களிடம் இருந்து பைக் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர்.  மேலும் இதுதொடர்பாக ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரியப்பன்  மகன் பவித்ரன் (25), நந்தகுளத்தைச் சேர்ந்த ரமேஷ் (31), ரமேஷின் நண்பர் ஆகிய 3 பேரை தீவிரமாகத் தேடி வந்தனர். இதையறிந்த பவித்ரன் சாத்தான்குளம் ஜேஎம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிப்காட் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : Valipar Charan ,court ,Sathankulam ,Thoothukudi ,
× RELATED சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் 4...