×

மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை விருதம்பட்டு பகுதியில்

வேலூர், அக்.23: காட்பாடி விருதம்பட்டு பகுதியில் ஐகோர்ட் உத்தரவு எதிரொலியாக ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
காட்பாடி விருதம்பட்டு பால்நகர் கிழக்கு பகுதியில் தெருக்களை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டியிருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் தனியார் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் அளந்து விதி மீறியிருந்தால் அவற்றை உடனடியாக அகற்றும்படி வேலூர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் 1வது மண்டல உதவி கமிஷனர் செந்தில் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆக்கிரமித்து கட்டியிருந்த 6 வீடுகளின் சுற்றுச்சுவர்கள் மற்றும் போர்டிகோ உள்ளிட்டவற்றை ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘ஐகோர்ட் உத்தரவின்பேரில் சில நாட்களுக்கு முன்பு பால்நகரில் உள்ள வீடுகள் அளக்கப்பட்டது. இதில் 6 வீடுகள் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர், போர்ட்டிகோ ஆகியவை கட்டியிருந்தது தெரியவந்தது. அவற்றை அகற்றிக்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். ஆனால் அவர்கள் அகற்றாததால் இன்று ஜேசிபி மூலம் அகற்றினோம்’ என தெரிவித்தனர். இதன்காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags : area ,corporation ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...