×

தேவதானம் பகுதியில் டூவீலரில் மணல் கடத்திய 3 ேபர் கைது

ராஜபாளையம், அக். 23: தேவதானம் பகுதியில் டூவீலரில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜபாளையம் அடுத்த தேவதானம் பகுதியில் மணல் கடத்துவதாக வந்த புகாரை அடுத்து சேத்தூர் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். தவம்பெற்ற நாயகி கோயிலுக்கு பின்புறம் தேவி ஆற்றுப் பகுதியிலிருந்து வேகமாக வந்த டூவீலர்களை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதே பகுதியை சேர்ந்த முத்துக்காளை(35), தங்கமலை(33), கோவிந்தன்(37) டூவீலர்களில் மணல் மூட்டைகளை கடத்தியது தெரிய வந்தது. மணல் மற்றும் டூவீலர்களை கைப்பற்றி மூவரையும் போலீாசார் கைது செய்தனர்.

Tags : area ,Devadanam ,
× RELATED மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது