×

அருப்புக்கோட்டையில் 40 லட்ச ரூபாய் மதிப்பில் பேவர்பிளாக் சாலைப்பணி


அருப்புக்கோட்டை, அக். 23: அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட மலையரசன் கோயில் பகுதியில் 14வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் அசோக்குமார், பொறியாளர் சாகுல்கமீது, உதவிப்பொறியாளர் காளீஸ்வரி, முன்னாள் ஒன்றியசேர்மன் சுப்பாராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், நகர திமுக செயலாளர் மணி, முன்னாள்நகர் மன்ற துணைத்தலைவர்கள் பழனிச்சாமி, தமிழ்காந்தன், காந்திநகர் திமுக பிரமுகர் சீனிவாசப்பெருமாள், ஒன்றிய இளைஞரணிஅமைப்பாளர் அழகுராமானுஜம், முன்னாள் கவுன்சிலர் முத்துவேல் கலந்து கொண்டனர்.

Tags : Aruppukottai ,
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்