×

வட்டாட்சியர் அலுவலகங்களில் இனி மக்கள் மனு அளிக்கலாம் கலெக்டர் தகவல்

விருதுநகர்,அக். 23: விருதுநகர் கலெக்டர் கண்ணன் விடுத்துள்ள அறிக்கை: கொரோனா தொற்று பரவும் நேரத்தில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பொதுமக்களின் மனுக்களை பெட்டியில் சேகரித்து உரிய அலுவலகங்களுக்கு அனுப்பப்படுகிறது. கலெக்டர் அலுலகத்தில் மக்கள் வந்து செல்வதை தவிர்க்கும் வகையில் சிவகாசி கோட்டாட்சியர், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர், சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது மக்கள் தங்களது மனுக்களை கொடுப்பதற்கும், முக்கிய மற்றும் அவசர மனுக்கள் தொடர்பாக கலெக்டரிடம் நேரில் பேசுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கலெக்டர் அலுலகத்திற்கு நேரில் வருவதை தவிர்த்து திங்கட்கிழமைகளில் அறிவிக்கப்பட்ட அலுவலகங்களில் மனுக்கள் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : offices ,governor ,
× RELATED அஞ்சலகங்களில் தூய்மை வாரம் கடைபிடிப்பு