×

விருதுநகரில் நெரிசலில் திணறும் மெயின் பஜார் வாகனஓட்டிகள் கடும் அவதி

விருதுநகர், அக். 23: விருதுநகர் மெயின் பஜாரில் சரக்கு இறக்க வரும் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விருதுநகர் மெயின்பஜார் ஆக்கிரமிப்பாளர்களால் ஏற்கனவே 20 அடியாக சுருங்கி விட்டது. இங்குள்ள நூற்றுக்காணக்கான கடைகளில் பொருட்கள் வாங்க வரும் மக்களாலும், இதன் வழியே இயக்கப்படும் சாத்தூர், அருப்புக்கோட்டை டவுன் பஸ்களாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மெயின் பஜாரில் உள்ள கடைகளுக்கு காய்கறி, பலசரக்கு மூடைகள் இறக்க ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன. லாரிகளில் இருந்து சரக்கு இறக்க குறைந்தது 15 முதல் 30 நிமிடங்கள் ஆகின்றன. அச்சமயம் பஸ்கள் வந்தால் அவ்வளவுதான். அங்கேயே நிற்க வேண்டிய நிலை தொடர்கிறது. மேலும் பஸ்களுக்கு பின்னால் வரும் வாகனங்கள், எதிரில் வரும் வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பிக்கின்றன. எனவே, மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சரக்கு இறக்க வரும் லாரிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். இல்லை மெயின் பஜார் வழியாக இயக்கப்படும் பஸ்களை ஏற்கனவே இயக்கியது போன்று டிடிகே ரோடு வழியாக இயக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bazaar ,motorists ,Virudhunagar ,
× RELATED சென்னை பாண்டி பஜாரில் இன்று மோடி ரோடு...