×

நாட்டுப்புற பாடல்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு

அருப்புக்கோட்டை, அக். 23: அருப்புக்கோட்டையில் கிராமிய கலைக்குழு சார்பில் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுகளினால் கொரோனா முற்றிலும் ஒழிந்து விட்டது என பொதுமக்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். இந்நிலையில் அருப்புக்கோட்டையில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரதி கிராமிய கலைக்குழுவினர் ஊரடங்கில் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம், கைகழுவுவது, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து நாட்டுப்புற , கிராமியப் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையம், பழைய பஸ்நிலையம், வெள்ளைக்கோட்டை, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் துவக்கி வைத்தார். விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு