×

ஒரே மகன், மகளை ராணுவத்திற்கு அனுப்பிய பெற்றோருக்கு ரூ.20 ஆயிரம் ஊக்க தொகை

தேனி, அக். 23:  ஒரே மகன், மகளை ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு ஊக்க மானியம் மற்றும் வெள்ளிப்பதக்கம் அரசு சார்பில்  வழங்கப்பட உள்ளது. இதன்படி ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.1000 மதிப்பிலான வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட உள்ளது. எனவே, தேனி மாவட்டத்தில் இதுவரை மானியம் பெறாத தனது ஒரே மகன் அல்லது மகளை ராணுவ பணிக்கு அனுப்பிய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் படை பணியில் பணிபுரியும் விபரங்களுடன் தேனி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

Tags : parents ,army ,
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...