×

வராக நதியில் குப்பை கொட்டினால் அபராதம்

பெரியகுளம், அக். 23: பெரியகுளம் நகரின் மையப்பகுதியில் ஓடும் வராக நதி பொதுமக்களால் கொட்டப்பட்ட குப்பைகளால் மாசு அடைந்தது. இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உத்தரவின் பேரில் தேனி பாரளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து வராகநதி ஆற்றை தூர்வாரி குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரம் பகுதி மக்கள் தூய்மைப்படுத்தபட்ட ஆற்றில் குப்பைகள் கொட்டி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் வராக நதியை தூய்மையாக பாதுகாக்கவும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் இணைந்து வராக நதியை ஒட்டி உள்ள குடியிருப்பு மக்களிடம் விழிப்புணர்வு, அபராத எச்சரிக்கை துண்டுபிரசுரங்களை வழங்கி வருகின்றனர். மேலும் குப்பைகளை வாங்க ஊராட்சியில் இருந்து நாள்தோரும் வாகனங்கள் வருவதையும், அதில் கொட்டாவிட்டால் தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் கொட்ட வேண்டுமென அறிவுறுத்தினர்.

Tags : dumping garbage ,Varaha ,river ,
× RELATED கொரோனா விதிமீறல் அபராதம்...