×

ஏர்வாடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கீழக்கரை, அக்.23:   கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் புகழ்பெற்ற பாதுஷா ஷஹீத் ஒலியுல்லாஹ் அடக்கஸ்தலம் உள்ளது. இங்கு ஆன்மீக மருத்துவத்திற்காக தமிழ்நாடு மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்திரைகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஏர்வாடி தர்காவை சுற்றி சுற்றியுள்ள பகுதிகளில் பலர் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக கீழக்கரை தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் அளித்ததின் பேரில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது தாசில்தார் வீரராஜா, துணை தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர் பார்கவி ஆகியோர் உடன் இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் செய்திருந்தனர்.

Tags : Removal ,Ervadi ,
× RELATED ஆக்கிரமிப்புகள் அகற்றம்