×

மணல் திருடிய 7 பேர் மீது வழக்கு

தொண்டி, அக்.23:  தொண்டி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொண்டி அருகே உள்ள பாண்டுகுடி கண்மாய்கரை அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதித்த அளவை விட அதிகமாக சவடு மண் எடுப்பதாக திருவாடானை துணை தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது சவடு மண் அள்ளிக் கொண்டிருந்த ஒரு ஜேசிபி மற்றும் ஆறு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மயிலாடுதுரை விஜய், நீர்குன்றம் பூமிநாதன், சிவா, கண்ணங்குடி சுப்பையா, பாண்டுகுடி ரமேஷ், புதுவயல் முருகேசன், கட்டவளாகம் ஜெகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி அருகே ஒரே வழக்கில் 11 பேர் கைது