×

நவராத்திரி திருவிழாவில் கொலு

பரமக்குடி, அக்.23:  பரமக்குடி வஉசி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில், நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டது. பரமக்குடி வஉசி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு  பள்ளி தலைவர் முத்துராமலிங்கம் சுப்பிரமணிய பிள்ளை தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்து ராமலிங்கம் பிள்ளை, தாளாளர் வின்சென்ட் ஜெயக்குமார், இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெய்வங்கள், மனித உருவங்கள்,விலங்கு உள்ளிட்ட அனைத்துவிதமான கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் மகேசுவரன், துணை ஒருங்கிணைப்பாளர் ஜெய குரு, முதல்வர் மகாதேவன் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : festival ,Navratri ,
× RELATED திருவண்ணாமலை தீபத்திருவிழா 7ம் நாள்...