×

ஒத்தக்கடையில் பெயர் பலகையை அகற்றியதால் மறியல்

மதுரை, அக். 23: ஒத்தக்கடை காந்திநகரில் இமானுவேல் சேகரன் படம் பொறிக்கப்பட்ட பெயர் பலகை அகற்றியதை கண்டித்து மறியல் நடந்தது.மதுரை யானைமலை ஒத்தக்கடை காந்திநகர் பகுதியில் இமானுவேல் சேகரன் படம் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பலகை இருந்துள்ளது. இதை திடீரென போலீசார் அகற்றியுள்ளனர். இதனை கண்டித்து மூவேந்தர் புலிப்படைத் தலைவர் வக்கீல் பாஸ்கர் தலைமையில் மறியல் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் தியாகராஜன், மண்டலச்செயலாளர் ரவிக்குமார், தொண்டரணி செயலாளர் விமல், கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலில் கலந்து கொண்டோரை ேபாலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED திருவாரூர் ரயில் நிலைய வளாகத்தில்...