×

பாதாளச்சாக்கடை குழியை மூடாத மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல் போராட்டம்

மதுரை, அக்.23: மதுரையில் பாதாளச்சாக்கடையை சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மதுரை ராஜாமில்ரோட்டில் பாதாளச்சாக்கடையை சீரமைப்பதற்காக மாநகராட்சி சார்பில் பள்ளம் தோண்டாடப்பட்டது. ஆனால், ஒருவாரமாகியும் இந்த பள்ளம் மூடப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதாளச்சாக்கடை பள்ளத்தை மூட மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ராஜாமில் ரோட்டில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி அதிகாரி தலைமையில் வந்த ஊழியர்கள், பள்ளத்தை மூடி சரி செய்வதாக உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

Tags : Road blockade protest ,corporation ,
× RELATED ஐதராபாத் மாநகராட்சியில் இன்று வாக்குப்பதிவு