விவசாயிகள் மகிழ்ச்சி சேதுபாவாசத்திரம் அருகே 4 அடி நீள மண்ணுழி பாம்பு சிக்கியது

சேதுபாவாசத்திரம், அக். 23: சேதுபாவாசத்திரம் அடுத்த இரண்டாம்புளிக்காட்டில் மல்லிப்பட்டினம் காங்கிரஸ் பிரமுகர் நாகூர்கனிக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அங்குள்ள தேங்காய் வாடியில் சாக்கு கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று அதன் அருகே மேய்ந்து கொண்டிருந்த கோழிகள் கத்தியது. இதனால் அங்கு பணியாற்றிய வேலையாட்கள் சந்தேகமடைந்து சாக்கு கட்டுகள் உள்ளே பார்த்தபோது 4 அடி நீள மண்ணுழி பாம்பு இருந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு நாகூர்கனி தகவல் தெரிவித்தார். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனவர் சிங்காரவேலுவிடம் மண்ணுளி பாம்பு ஒப்படைக்கப்பட்டது.

Related Stories:

>