×

ரூ.2.20 ரொக்கம், 66 கி.தங்கம் பக்தர்கள் காணிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.210.25 கோடியில் புதிய திட்ட பணிகள் முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார்

புதுக்கோட்டை, அக். 23: புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.210.25 கோடியில் புதிய திட்ட பணிகளுக்கான முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை மாவ ட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.210.25 கோடியில் 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.54.68 கோடி மதிப்பில் முடிவுற்ற 48 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ், கலெக்டர் உமாமகேஸ்வரி, வீட்டுவசதி வாரியத்தலைவர் வைரமுத்து, எம்எல்ஏக்கள் ரெத்தினசாபதி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் 10,327 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 9,859 நபர்கள், இறந்தவர்கள் 147 நபர்கள். 21.10.2020 அன்று பாதிக்கப்பட்டவர்கள் 26 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 55 நபர்கள், தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 321 நபர்கள். 21.10.2020 வரை இம்மாவட்டத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 1,45,266 நபர்கள். 21.10.2020 அன்று மட்டும் இம்மாவட்டத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 1,856 நபர்கள். இம்மாவட்டத்தில் 2 பரிசோதனை நிலையங்கள் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 70 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் வீதம் இதுவரை 10,225 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 4.77 இலட்சம் நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி தென்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததன் விளைவாக இந்நோய்த் தொற்றுப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் 3,93,313 விவசாயிகளுக்கு 628 கோடி ரூபாய் என்ற அதிகளவு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தந்தது அரசு. கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறைய வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். நத்தம் பண்ணை கிராமம் எல்லைக்குட்பட்ட பாலன் நகர் பகுதியில் 256 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் ரூபாய் 22.29 கோடி திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. ஆலங்குடி தாலுகா, பாச்சிக்கோட்டை கிராம எல்லைக்குட்பட்ட ஆலங்குடி திட்டப் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 288 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் ரூபாய் 26.50 கோடி திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன என்றார்.

Tags : Edappadi ,district ,Pudukottai ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...