×

கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.23: பெரம் பலூர் மின்வாரிய மேற்பா ர்வை பொறியாளர் அலு வலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், 5ம்தேதி முதல் இதுவரையில் மின்வாரியத்தில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் அடையாளம்கண்டு, ரூ380 தினக் கூலி வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊக்கத் தொகை, கருணைத்தொகை 30 சதவீதம் வழங்கிட வேண்டும். 22.8.2018-இல் ஏற்பட்ட வேலைப்பளு ஒப்பந்தத்தின்போது மின்துறை அமைச்சர் அறிவித்தபடி ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஒப்பந்த ஊழியர்களே மின்வாரியத்தில் இல்லை என்று அதிகாரிகளை மிரட்டி சான்றுகள் பெறக்கூடாது. பகுதி நேர துப்புரவு பணியாளர்களை அடையாளம் கண்டு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மின்வாரியத்தில் பலஆண்டுகளாக ஊதியமின்றி பணியாற்றும் பகுதிநேர ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், கோட்டச் செயலர் நாராயணன், வட்ட செயலர் பன்னீர்செல்வம், உறுப்பினர்கள் மலரவன், தர்மராஜ் உள்பட தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்