×

செந்துறை வடக்கு ஒன்றிய திமுக கூட்டம்

அரியலூர், அக். 23: செந்துறை வடக்கு ஒன்றிய திமுக சிறப்பு கூட்டம் ஆர்.எஸ்.மாத்தூரில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி வரவேற்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை கழக பொறுப்பாளர்களுக்கு தகுதி சான்றிதழை கழக தேர்தல் ஆணையர் சைதை. குணசேகரன் வழங்கினார். கூட்டத்தில் திமுகவினரை தரைக்குறைவாகவும், அவமரியாதையாகவும் முகநூலில் பதிவிட்ட பாஜகவை சார்ந்தவர் மீது கடந்த 17ம் தேதி குவாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்யாவிட்டால் இன்று (23ம் தேதி) ஆர்.எஸ்.மாத்தூரில் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் திமுக பொறுப்பாளர்கள் விஸ்வநாதன், தமிழ்மாறன், சித்ரா மற்றும் ஊராட்சி கிளை தலைவர்கள், இளைஞரணியினர், அனைத்து நிலை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Tags : Sendurai North Union ,DMK Meeting ,
× RELATED பேரவையில் தமிழக ஆளுநர் உரை 2ம் தேதி...