×

புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலில் வாரச்சந்தையை விரைவில் தொடங்க வேண்டும்

காரைக்கால், அக்.23: புதுச்சேரியைத் தொடர்ந்து காரைக்காலிலும் வாரச்சந்தையை தொடங்க வேண்டும் என புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் வலியுறுத்தியுள்ளார். காரைக்காலில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் காரைக்கால் வாரச்சந்தை நிறுத்தப்பட்டது. தற்போது ஓரளவுக்கு சகஜ நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளதாக நம்புகிறோம். இதே நிலைதான் புதுச்சேரியிலும் நிலவுகிறது. பொதுமக்களின் நலன் கருதி, புதுச்சேரியில் சண்டே மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுச்சேரி மதகடிப்பட்டு வாரச்சந்தையும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் காரைக்கால் மக்கள் பெருமளவில் பயன்பெற்று வந்த வாரச்சந்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்கால் மக்கள் சார்பிலும், திமுக சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், வாரச்சந்தை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்தாலும், பொதுமக்கள் தனிமனித விலகல், முககவசம் போன்றவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டால் மட்டுமே கொரோனாவை முழுமையாக எதிர்கொள்ளமுடியும், இன்னும் சில நாளில் தீபாவளித் திருநாள் வருவதால், பிற மாநிலங்களைப்போல புதுச்சேரி மாநிலத்திலும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து தரவேண்டும். முக்கியமாக, தற்போது கடைத்தெரு பகுதிகளில் நடைமுறைபப்படுத்த திட்டமிட்டிருக்கும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தீபாவளி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு முககவசம், சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து அறிவிக்கவேண்டும். வாரச்சந்தை, நேருமார்க்கெட் காய்கறி மற்றும் கடை உள்ள இடத்தில், பொதுமக்கள் கை கழுவ தேவையான தண்ணீர், சோப்பு, மற்றும் கிருமி நாசினியை அவசியம் வைக்கவேண்டும. என்றார்.

Tags : Karaikal ,Puducherry ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...