×

தாமரை குளம் பகுதியில் குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு

அவிநாசி, அக்.23:  அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஊராட்சி நிர்வாகத்தினர் தாமரைக்குளம் பகுதியில் நேற்று இரவு  கொட்டினர். இதையறிந்த அப்பகுதி மக்கள், விவசாயிகள் குப்பை கொட்டிய லாரியைத் தடுத்து நிறுத்தி, முற்றுகையிட்டு, சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறியது: விரைவில், அத்திக்கடவு நீர் வரவுள்ள நிலையில் வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் இதுபோல குப்பைகளைக் கொட்டுவது முறையல்ல. ஏற்கனவே பல முறை குப்பைகளை கொட்ட வரும்போது எச்சரிக்கை விடுத்துள்ளோம். இருப்பினும் ஊராட்சி நிர்வாகத்தினர் கண்டு கொள்வதில்லை. எனவே கொட்டிய குப்பைகளை திரும்ப அள்ளிச் செல்ல வேண்டும். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் தாமரைக்குளத்திற்குள் கொட்டிய குப்பைகளைத் திரும்ப லாரியில் அள்ளிச்சென்றனர்.

Tags : area ,Lotus Pond ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...