×

ரூ.8.76 ேகாடி மதிப்பீட்டில் அணை பூங்காக்கள் நவீன மயம்

பாலக்காடு,அக்.23:  கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகேயுள்ள போத்துண்டி அணைப் பூங்கா சுற்றுலா மேம்பாட்டுக்கழகம் சார்பில் 4 கோடி ரூபாய் செலவீட்டில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக சீரமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆகாய சைக்கிள் சவாரி டவர், கார் சவாரி, மரம் விட்டு மரம் செல்கின்ற ஆகாய சவாரி என புதிய விதமான சாதனைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. போத்துண்டி அணைப்பூங்காவை கேரள முதல்வர் பினராயி விஜயன் காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கேரள மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சுரேந்திரன் தலைமை வகித்தார்.

விழாவில் நீர்வளப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி, எம்.பி., ரம்யாஹரிதாஸ், எம்.எல்.ஏ., கே.பாபு, சுற்றுலா மேம்பாட்டுக்கழக இயக்குநர் பாலகிரண், செயலாளர் ராணிஜார்ஜ், நெம்மாரா பிளாக் பஞ்சாயத்து தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சி தலைவர் பிரேமன், துணைத்தலைவர் சதி உன்னி, மாவட்ட பஞ்சாயத்து வளர்ச்சி நிர்வாகக்குழுத் தலைவர் கீதா டீச்சர், மலம்புழா நீர்வளப்பாசனத்துறை பொறியாளர் அணில்குமார், செயலாளர் அஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதே போல மங்கலம் அணைப்பூங்கா ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்காவையும் கேரள முதல்வர் நேற்று திறந்து வைத்தார். விழாவில் நெம்மாரா பிளாக் பஞ்சாயத்துத் தலைவர் ராமகிருஷ்ணன், வண்டாழி ஊராட்சி தலைவர் சுமாவலி, மோகன்தாஸ், உறுப்பினர் பிந்துசதீஷ், சுற்றுலாத்துறை துணை இயக்குநர் சுபைர்குட்டி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

Tags : Dam parks ,
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்