×

ஒன்றியக்குழு கூட்டத்தை தனியாக நடத்த முடிவு ஆணையாளரிடம் திமுக உறுப்பினர்கள் மனு

ஓமலூர், அக்.22: ஓமலூர் ஒன்றியக்குழு கூட்டத்தை தனியாக நடத்த முடிவு செய்து, திமுக உறுப்பினர்கள் ஒன்றிய ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். ஓமலூர் ஒன்றியக்குழுவில் தலைவர் உட்பட 27 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், அதிமுக கூட்டணி உறுப்பினர்கள் 16 பேரும், திமுக உறுப்பினர்கள் 9 பேரும், சுயேச்சைகள் 2 பேரும் உள்ளனர். இந்நிலையில், ஒன்றியக்குழு கூட்டம் முறையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, 3 மாதம் கடந்த நிலையிலும் கூட்டம் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக திமுக உறுப்பினர்கள் ஒன்றிய ஆணையரை சந்தித்தனர்.

அப்போது, 3 மாதம் கடந்த நிலையிலும் ஒன்றியக்குழு கூட்டத்தை நடத்தாதது குறித்து கேள்வி எழுப்பினர். அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாமல் பயந்து கொண்டு, ஒன்றியக்குழு கூட்டம் நடத்துவதை தவிர்த்து வருவதாக புகார் தெரிவித்தனர். மேலும், உடனடியாக இந்த மாதம் ஒன்றியக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். தவறும் பட்சத்தில், தமிழ்நாடு ஊராட்சி சட்டங்கள் 1994, தமிழ்நாடு ஊராட்சி விதிகள் 1999-ன் விதி 8-ன் படி, திமுக உறுப்பினர்களே தனியாக ஒன்றியக்குழு கூட்டத்தை கூட்ட நேரிடும் என தெரிவித்து, ஆணையரிடம் மனு கொடுத்தனர். அப்போது, ஒன்றியக்குழு கூட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : DMK ,Commissioner ,meeting ,Union Committee ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...