×

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, அக்.22:  கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தின் ஓட்சா அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். திருப்பதி, வெங்கடேசன், திருப்பதி, ஓட்சா கூட்டமைப்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பின் தலைவர் அமல்ராஜ், ராமர், சர்தார், சக்திவேல், கருணாகரன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.  
ஆர்ப்பாட்டத்தின் போது, தூய்மை காவலர்களுக்கு முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 2013ம் ஆண்டிற்கு முன் பணியில் சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கும்,1400 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,cleaning staff ,
× RELATED நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்