×

அனைத்து கட்சி கூட்டம்

தர்மபுரி, அக்.22: தர்மபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம், மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோவி சிற்றரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் குமார், விசுவநாதன், கந்தசாமி, சிஐடியூ மாவட்ட செயலாளர் நாகராசன், மதிமுக மாவட்ட செயலாளர் தங்கராசு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் தேவராசன், விசிக மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மமக மாவட்ட தலைவர் யாசின் தென்றல் ஆகியோர் பேசினர். தர்மபுரி நகர திமுக பொறுப்பாளர் அன்பழகன், திமுக பொன்.மகேஸ்வரன், தி.க. சிவாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அதகப்பாடியில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தனியார் கிரானைட் தொழிற்சாலை, தொழிலாளர்களுக்கு ஊதிய குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, சிஐடியூ சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நிலுவையில் உள்ளது. இதனிடையே, கொரோனா காலத்தில் தொழிலாளர்களின் பணி நீக்க உத்தரவை நிர்வாகம் வழங்கியது. இது சட்ட விரோத செயலாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு, தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், கலெக்டரிடம் மனு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

Tags : party meeting ,
× RELATED காங்கிரஸ், மற்ற கட்சிகளை விட ஆட்சி...