×

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் வாலிபர் கைது

உளுந்தூர்பேட்டை, அக். 22:  உளுந்தூர்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சாலாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி இதே கிராமத்தில் சம்பவத்தன்று மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த உ.கீரனூர் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மணிராஜ்(28) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்ததை அடுத்து எலவனாசூர்கோட்டை காவல்நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மணிராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது