×

மாவடியில் நலத்திட்ட உதவி

களக்காடு, அக்.22:  களக்காடு ஒன்றியம் மலையடிபுதூர் ஊராட்சி மாவடி கிராமத்தில் அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா மற்றும் 2000 பேருக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமை வகித்தார். களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கட்சி கொடியேற்றப்பட்டு 2ஆயிரம் பேருக்கு நலத்திட்டத்தை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ வழங்கினார். விழாவில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  ஏற்பாடுகளை மாவடி காமராஜ் செய்து இருந்தார்.

Tags : district ,
× RELATED சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட...