×

கொலை வழக்கில் தொடர்பு குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

தூத்துக்குடி, அக். 22: தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.  தூத்துக்குடி, சில்வர்புரத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் (42). முன்விரோதம் காரணமாக இவர் கடந்த செப். 22ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த சிப்காட் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த  ஜார்ஜ் (48), அவரது  உறவினரான விளாத்திகுளம் வேடபட்டியைச் சேர்ந்த காளிமுத்து மகன் இளையராஜா (39) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

 இதனிடையே ஜார்ஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யுமாறு எஸ்பி. ஜெயக்குமார் விடுத்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து சிப்காட் போலீசார், ஜார்ஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்வதற்கான ஆணையை பாளை மத்திய சிறையில் வழங்கினர்.

Tags :
× RELATED கபடியில் முன்விரோதம் வாலிபர் மீது தாக்குதல்