×

சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் மூதாட்டிக்கு மிரட்டல்

சாத்தான்குளம், அக். 22: சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 சாத்தான்குளம் அருகே தச்சன்விளையைச் சேர்ந்த சுப்பையா மனைவி சரஸ்வதி (67). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனையன் என்பவரது குடும்பத்திற்கும் இடத்தகராறு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் உருவான நிலையில் நேற்று முன்தினம் ஆனையன், சரஸ்வதியை அவதூறாகப் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்தாராம்.  இதுகுறித்த புகாரின்பேரில் ஆனையன் மீது கொலை மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவின்கீழ் ஆனையன் மீது தட்டார்மடம் எஸ்.ஐ. முத்துசாமி வழக்குப் பதிந்து தேடி வருகிறார்.

Tags : Sathankulam ,
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு