×

விவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஜமுனாமரத்தூரில்

போளூர், அக்.22: ஜமுனாமரத்தூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் எம்.ஜீவாமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கு.மரியதேவ் ஆனந்த், முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் ச.சதீஷ்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் 2020- 2021ம் ஆண்டிற்கான விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிற்சிகள், பயிர் வகை குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இதில் குட்டக்கரை, பலாமரத்தூர், மேல்சிலம்படி, கோவிலூர் உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள ஆத்மா திட்ட உறுப்பினர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆத்மா திட்ட தலைவர் ர.ராமு நன்றி கூறினார்.

Tags : Farmers Consultative Meeting ,
× RELATED திசையன்விளையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்