×

ராஜபாளையம் அருகே பஞ்சாலையில் பயங்கர தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

ராஜபாளையம், அக். 22: ராஜபாளையம் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரில் தளவாய்புரம் சாலையில் கழிவு பஞ்சு மற்றும் துணிகள் மூலம் மெத்தை தயார் செய்யும் ஆலை உள்ளது. இங்கு நேற்று வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மிஷினில் ஏற்பட்ட மின்சார கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக ஆலையை விட்டு வெளியேறினர். ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையில் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள், துணிகள் அனைத்தும் எரிந்து நாசமாகின. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மிஷின்கள் சேதமடைந்தன. இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : fire accident ,Panchala ,Rajapalayam ,
× RELATED ஐதராபாத் கூகட்டுப்பள்ளியில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து