திருவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் 650வது திருநட்சத்திர விழா

திருவில்லிபுத்தூர், அக்.22: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள மணவாள மாமுனிகள் 650வது திருநட்சத்திரம் எனப்படும் பிறந்ததின விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கோயில் வளாகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மணவாள மாமுனிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் மணவாள மாமுனிகளுக்கு ஆண்டாள் கோவில் மற்றும் பெரிய பெருமாள் சன்னதி, பெரிய ஆழ்வார் சன்னதி ஆகியவற்றில் மங்களாசாசனம் நடைபெற்றது. விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட கவுன்சிலர் கணேசன், பொருளாளர் கருமாரி முருகன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>