×

மயிலாடும்பாறை அருகே கண்மாய் பராமரிப்பு பணி ஆய்வு

வருசநாடு, அக்.22: மயிலாடும்பாறை அருகே கண்மாய் பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மயிலாடும்பாறை அருகே சிறுகுளம் கண்மாய் பகுதிகளில் கரைகளை பலப்படுத்தும் பணி, வாய்க்கால் தூர்வாரும் பணி, வாய்க்காலில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இவற்றை பொதுப்பணித்துறை பொறியாளர் கணேசமூர்த்தி, பொதுப்பணித்துறை இன்ஸ்பெக்டர்கள் சுரேந்திரன், ராஜகோபால் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் மூல வைகை ஆற்றில் இருந்து சிறுகுளம் கண்மாய்க்கு தண்ணீரை நிரப்புவது, பராமரிப்பு பணி மேற்கொள்வது, கரைகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை தரமாக விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து விவசாயிகளிடம் கேட்டதற்கு, மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீரை தேக்கினால் சிறுகுளம் கண்மாயை சுற்றியுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு குடிநீர் பஞ்சம் எப்போதும் வராது. கண்மாய் பணி நடைபெற்று வருவது வரவேற்கத்தக்கது என தெரிவித்தனர்.

Tags : Inspection ,Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...