×

மணல்மேட்டில் நகரும் ரேசன் கடை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

திருப்புவனம்,அக்.22: திருப்புவனம் அருகே மணல்மேட்டில் நகரும் ரேசன் கடை துவக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பெத்தானேந்தல் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சோணைரவி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் ராமேஸ்வரி முணியாண்டி வரவேற்றார். மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன், நகரும் ரேசன் கடையின் விற்பனையை துவக்கி வைத்து பேசுகையில், மணல் மேட்டிலுள்ள 170 ரேசன் கார்டுதாரர்களும் 2 கி.மீ தூரமுள்ள பெத்தானேந்தலில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வந்தனர். இந்த நிலையை மாற்றி நகரும் ரேசன் கடை மாதத்திற்கு இரண்டு முறை மணல் மேட்டுக்கு வந்து பொருட்களை விநியோகம் செய்யும் என்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் புவனேந்திரன், சிஎஸ்ஆர் அழகர்சாமி, வக்கீல் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டுறவு சங்க செயலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags : MLA ,ration shop ,sand dunes ,
× RELATED ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் திருப்பாலைக்குடி மக்கள் கோரிக்கை