கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் கத்தோலிக்க பிஷப் கண்டனம்

மதுரை, அக்.22: மதுரை மறைமாவட்ட கத்தோலிக்க பிஷப் அந்தோணி பாப்புசாமி  வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மேலக்கோவில்பட்டியில் புனித சவேரியார் ஆலயத்தில் வழிபாடு நடந்த போது, சமூக விரோதிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட உடையார்பட்டியில் கிறிஸ்துவர்களின் கல்லறைகள் இடிக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெறும் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் மிகப்பெரிய விளைவுகளுக்கு விதையாகிவிடுமோ என்று அஞ்சுகிறோம். சமூகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் வளர்க்க விரும்புவது கிறிஸ்துவம். எனவே, குண்டு வீசிய குற்றாவாளிகள், கல்லறைகளை தகர்த்தவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: