×

மீண்டும் துவங்கியது `பரேடு’ கொரோனா அச்சத்தில் மதுரை போலீசார்

மதுரை, அக்.22:  மீண்டும் `பரேடு’ துவங்கியதால் கொரோனா அச்சம் மதுரை போலீசார் மத்தியில் தலைதூக்கியுள்ளது. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறிப்பிட்ட நேரத்திற்கு `பரேடு’ நடத்தப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் அனைத்து போலீசாரும் சீருடையில் பரேடில் சரியான நேரத்தில் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவியதால் `பரேடு’ நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் `பரேடு’ துவங்கியுள்ளது. இந்த பரேடில் ஒருவித அச்சத்துடனே மதுரை போலீசார் கலந்து கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பரேடில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கஷ்டம். போலீசார் பலர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். யாருக்காவது ஒருவருக்கு தொற்று இருந்து, அது பலருக்கும் பரவி விட்டால் விளைவு மோசமாக இருக்கும். எனவே, பரேடை தற்காலிகமாக ரத்து செய்யலாம்’ என்று தெரிவித்தனர்.

Tags : Madurai ,parade ,
× RELATED மதுரையில் பரபரப்பு: விசாரணைக்கு...