திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு நினைவிடத்தில் ஐஜி, கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி

திருச்சி, அக். 22: திருச்சி சுப்ரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள நினைவு தூணில் மத்திய மண்டல ஐஜி ஜெயராம், மாநகர கமிஷனர் லோகநாதன், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, எஸ்பி ஜெயச்சந்திரன், ரயில்வே எஸ்பி செந்தில்குமார், துணை கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 63 குண்டுகள் முழங்க உயிர் நீத்த காவலர்களுக்கு போலீசார் அஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலணி வளாகத்தில் உள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Related Stories:

>