×

திறன் வளர்ப்பு பயிற்சி

நீடாமங்கலம். அக்.22: திருவாரூர் மாவட்ட நபார்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குனர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எழிலரசன் முன்னிலை வகித்தார். பயிற்சியில் கூத்தாநல்லூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், நீடாமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், விராட்ரூபா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பிரபாரூபா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், சொர்ணரூபா உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குனர்கள் மற்றும் முதன்மை செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயனாளிகளுக்கு நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சான்றுகள் வழங்கினார்.

Tags :
× RELATED சுற்றுலா வழிகாட்டிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி