×

தஞ்சையில் வரும் 28ம் தேதி பொது வேலைநிறுத்தம் தொடர்பாக 8 மாவட்டங்களின் விழிப்புணர்வு மாநாடு ஏஐடியூசி தொழிற்சங்கம் அறிவிப்பு

தஞ்சை, அக். 22: தஞ்சையில் ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சந்திரகுமார் விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். வருமானவரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லாத அனைவருக்கும் மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். வங்கி, ரயில்வே, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, கார்ப்பரேட் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக போராட்டங்களை நடத்தி வருகிறது.
தற்போது ஒட்டுமொத்த போராட்டமாக நவம்பர் 26ம் தேதி இந்தியா முழுவதும் அனைத்தும் முடங்குகிற அளவுக்கு அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடக்கிறது.

இதற்கான விழிப்புணர்வு மாநாடு தஞ்சையில் வரும் 28ம் தேதி நடக்கிறது. இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் இருந்து தொழிற்சங்க, விவசாய சங்க, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கவும், பொது வேலை நிறுத்தத்தை வெற்றியாக்க திட்டங்களை வகுத்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்கள் துரை.மதிவாணன், கஸ்தூரி, தெரு வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : AITUC ,trade union announcement ,awareness conference ,districts ,strike ,Thanjavur ,
× RELATED தேசிய மீன்வள கொள்கையை ரத்து...