பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் புதுக்கோட்டையில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு

புதுக்கோட்டை, அக்.22: தென்மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனையில் சாதனை படைத்து வருகிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் காப்பதில் அக்கறை கொண்டுள்ள இந்நிறுவனம் தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்து வெற்றி கண்டுள்ளது. மேலும் உலகெங்கும் பரவியுள்ள தமிழருக்காய் www.ramrajcotton.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் விற்பனையை விரிவுப்படுத்தியதோடு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை கீழராஜவீதியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ஷோரூம் திறந்துள்ளது. இந்த ஷோரூமை புதுக்கோட்டை குழந்தைகள் நல மருத்துவர் ராம்தாஸ் திறந்து வைத்தார். காரைக்குடி பவானி டிரான்ஸ்போர்ட்ஸ் வள்ளியப்பன் குத்துவிளக்கேற்றினார். புதுக்கோட்டை வயி சண்முகம்பிள்ளை ஜூவல்லர்ஸ் வெங்கடாசலம் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். தேசிய நல்லாசிரியர் விருதாளர் கவிஞர் தங்கம்மூர்த்தி முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.

ராம்ராஜ் காட்டன் ஷோரூம்களில் அட்ஜஸ்டபிள் வேட்டி, பேன்சி பார்டர் வேட்டி, கறை படிதாத வேட்டி, நறுமண வேட்டி, ரிங்கிள் பிரி வேட்டி, சுப முகூர்த்த வேட்டி, எம்ப்ராய்டரி வேட்டி, மயில்கண் வேட்டி, பஞ்ச கச்ச வேட்டி, பட்டு வேட்டி என வேட்டி ரகங்கள் ஏராளம். காட்டன் சர்ட்டுகள், எம்ப்ராய்டரி சர்ட்டுகள், ரிங்கிள் பிரி சர்ட்டுகள், கூல் காட்டன் சர்ட்டுகள், சுபமுகூர்த்த சர்ட்டுகள், அல்டிமேட் சர்ட்டுகள், டிசைனர் சர்ட்டுகள், பட்டு சர்ட்டுகள், பார்டர் மேட்சிங் லினன் சர்ட்டுகள் என ரகங்கள் ஏராளமாக உள்ளன. அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களிலும் விமான நிலையங்களிலும், ஷோரூம்கள் திறக்க தயாராகி வருகிறது. ராம்ராஜ் காட்டனின் வேட்டி, சர்ட்டுகள், பனியன்கள் உள்ளிட்டவை அதன் ஷோரூம்களில் மட்டுமின்றி முன்னணி ஜவுளி நிறுவனங்களிலும் கிடைக்கும் என ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>