×

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.16.58 லட்சத்தில் 119 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

பெரம்பலூர், அக். 22: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒருவருக்கு தையல் இயந்திரம், 12 பேருக்கு சலவை பெட்டிகள், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தை சார்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த 106 விதவை முஸ்லிம்களுக்கு தலா ரூ.15,000 என மொத்தம் 119 பேருக்கு ரூ.16.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார். அப்போது அரசின் மூலம் நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் இதை மூலாதாரமாக கொண்டு வாழ்வுக்கு தேவையான, நிலையான வருவாயை ஏற்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரமணகோபால், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி, மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கவுரவ செயலாளர் ஹமிதா கலாம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளர் துரைசாமி பங்கேற்றனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...