×

நாகை ஆயுதப்படை மைதானத்தில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி

நாகை, அக்.22: நாகை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, நாகை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Tags : guards ,Naga Armed Forces Grounds ,
× RELATED காவலாளியை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் 2 பேர் கைது