×

வனச்சரக ஊழியரின் பைக்கை சேதப்படுத்திய மர்ம நபர்களுக்கு வலை

நாகை, அக்.22: நாகை அருகே வனச்சரக ஊழியரின் பைக்கை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாகை வனச்சரகத்தில் வனவராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன் (51). கீழையூர் அருகே பிரதாபராமபுரம் பகுதியில் மர்ம நபர்கள் குயில் பிடிப்பதாக இவருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியன் பைக்கில் சென்றார். தனது பைக்கை தைல தோப்பு அருகே நிறுத்திவிட்டு தகவல் வந்த இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார். ஆனால் அங்கு யாரும் இல்லை. இதையடுத்து அவர் அங்கிருந்து திரும்பி வந்து தனது பைக்கை பார்த்தபோது, முன்புற வீல் டயர், கண்ணாடி, சீட் உள்ளிட்டவைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் கீழையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : forest ranger ,
× RELATED பைக் விபத்தில் சிக்கியவருக்கு...